தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
தேன்கனிக்கோட்டை அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தேன்கனிக்கோட்டை
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள தண்டுகாரனஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் தர்மன் (வயது 55). கூலித்தொழிலாளி. இவரது மனைவி புவனேஸ்வரி. இவர் கடந்த 15 ஆண்டுக்கு முன்பு இறந்து விட்டார். இவருக்கு குழந்தைகள் இல்லை. இதனால் மனமுடைந்து காணப்பட்ட தர்மன் நேற்று முன்தினம் அளவுக்கு அதிகமாக மது அருந்தி விட்டு தேன்கனிக்கோட்டை அருகே என்.கொத்தூர் கிராமத்தில் அரசு புறம்போக்கு நிலத்தில் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் தேன்கனிக்கோட்டை போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தினேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.