திருப்புவனம்,
திருப்புவனம் அருகே உள்ள கட்டமன்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் ஆதிக்கண்ணன். இவருடைய இளைய மகன் பாலகுமார் (வயது 16). இவர் மணலூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். சம்பவத்தன்று பாலகுமார் செல்போனில் விளையாடி கொண்டிருந்ததாகவும், அதை பெற்றோா் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் வீட்டில் தூக்குப்போட்டு பாலகுமார் தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து திருப்புவனம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆதிலிங்கம்போஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.