ராயக்கோட்டை
கெலமங்கலம் அருகே உள்ள யு.கொத்தப்பள்ளியை சேர்ந்தவர் மஞ்சுநாத் (வயது 34). கூலித்தொழிலாளி. காது கேட்காத வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளியான இவர் வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்தார். சம்பவத்தன்று அவர் வீட்டில் தூக்கில் தொங்கினார். அவரை உறவினர்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மஞ்சுநாத் இறந்தார். இதுகுறித்து கெலமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.