சுமை தூக்கும் தொழிலாளி தற்கொலை
சுமை தூக்கும் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
கொரடாச்சேரி தெற்கு மாங்குடியை சேர்ந்த பச்சைமுத்து மகன் முருகானந்தம் (வயது36). சுமை தூக்கும் தொழிலாளி. இவருடைய மனைவி ரஞ்சிதா (25). இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதில் மனம் உடைந்த முருகானந்தம் சம்பவத்தன்று பூச்சி மருந்தை (விஷம்) குடித்தார். இதனால் மயங்கி விழுந்த அவரை உறவினர்கள் மீட்டு திருவாரூர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முருகானந்தம் பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக அவருடைய மனைவி ரஞ்சிதா கொரடாச்சேரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் கொரடாச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.