பாலக்கோடு:
பாலக்கோடு அருகே உள்ள காட்டம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராமன் (வயது 70). இவருக்கு சொந்தமாக விவசாய நிலம் உள்ளது. இதனை பிரித்து கொடுப்பதில் ராமனுக்கும், அவருடைய அக்கா, தங்கை குடும்பத்தினருக்கும் இடையே தகராறு இருந்து வந்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் அவர்கள் நிலத்தை பிரித்து கொடுக்க கட்டாயப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதில் மனவேதனை அடைந்த ராமன் நேற்று மாலை வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து பாலக்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.