பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
கிருஷ்ணகிரியில் பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரியில் பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பிளஸ்-1 மாணவி
கிருஷ்ணகிரி பாரதியார் நகர் பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன். இவரது மகள் தரணி (வயது 16). இவர் அங்குள்ள பள்ளி ஒன்றில் பிளஸ்-1 படித்து வந்தார். மாணவிக்கு அடிக்கடி உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனால் அவதிப்பட்ட அவர் பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் உடல் நலம் குணமடையவில்லை.
இதனால் மனமுடைந்து காணப்பட்ட தரணி சம்பவத்தன்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை கண்டு பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். இது குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
விசாரணை
அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனைக்கு பிறகு மாணவியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. மாணவி தற்ெகாலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பிளஸ்-1 மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.