சிதம்பரத்தில் மது குடிக்க மனைவி பணம் தராததால் கணவர் தற்கொலை

சிதம்பரத்தில் மது குடிக்க மனைவி பணம் தராததால் கணவர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-11-25 18:45 GMT

சிதம்பரம்,


சிதம்பரம் சம்பந்தக்கார தெருவை சேர்ந்தவர் அகோரமூர்த்தி(வயது 55). மது குடிக்கும் பழக்கம் உடையவர். இவர் தனது மனைவி செல்லத்திடம் மது குடிக்க பணம் கேட்டு தகராறு செய்தார். ஆனால் செல்லம் பணம் கொடுக்க மறுத்துள்ளார். இதனால் மனமுடைந்த அகோரமூர்த்தி வீட்டில் கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் சிதம்பரம் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்