தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
காவேரிப்பட்டணம் அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
காவேரிப்பட்டணம்:
காவேரிப்பட்டணம் அருகே உள்ள எம்.சவுளூரை சேர்ந்தவர் கோவிந்தசாமி (வயது 75). கூலித்தொழிலாளி. வயிற்று வலியால் அவதிப்பட்ட இவர், இதற்காக பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. இதனால் மனமுடைந்த கோவிந்தசாமி கடந்த 10-ந் தேதி திரவுபதி அம்மன் கோவில் அருகில் விஷம் குடித்து விட்டு மயங்கி கிடந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கோவிந்தசாமி நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து காவேரிப்பட்டணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.