வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
தர்மபுரி அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தர்மபுரி மாவட்டம் காவேரிகொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் மனோஜ்குமார் (வயது23). பட்டதாரியான இவர் விவசாய பணிகளை செய்து வந்தார். இவர் தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு பெற்றோரிடம் வற்புறுத்தி வந்ததாக தெரிகிறது. ஏதாவது ஒரு வேலைக்கு சென்றால் திருமணம் செய்து வைப்பதாக குடும்பத்தினர் தெரிவித்தனர். இதனால் மனமுடைந்து காணப்பட்ட மனோஜ்குமார் வீட்டில் தூக்குப்போட்டுக் கொண்டார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மனோஜ் குமாரை மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது அவர் இறந்திருப்பது தெரியவந்தது. இந்த தற்கொலை சம்பவம் குறித்து கிருஷ்ணாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.