சிப்ஸ் கடை உரிமையாளர் தற்கொலை

தர்மபுரியில் சிப்ஸ் கடை உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-10-28 18:45 GMT

தர்மபுரி குமாரசாமிப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் அன்பழகன் (வயது 51). சிப்ஸ் கடை உரிமையாளர். இவர் ராமநாதபுரத்தில் கடை நடத்தி வந்தார். இவருக்கு மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். அன்பழகன் மாதம் ஒருமுறை தர்மபுரியில் உள்ள வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம். தர்மபுரி வந்த அவர் மனைவி மற்றும் மகன்களுடன் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வீட்டில் உள்ள ஒரு அறையில் அன்பழகன் தூக்குப்போட்டு கொண்டார். இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது அவர் ஏற்கனவே இறந்திருப்பது தெரியவந்தது. இந்த தற்கொலை தொடர்பாக தர்மபுரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்