சூளகிரியில் தொழிலாளி தீக்குளித்து தற்கொலை
சூளகிரியில் தொழிலாளி தீக்குளித்து தற்கொலை
சூளகிரி:
சூளகிரி வாணியர் தெருவை சேர்ந்தவர் லகுமேஷ் (வயது 39). கூலித்தொழிலாளி. இவருக்கு மனைவியுடன் தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் கடந்த 3 மாதங்களாக கணவன், மனைவி பிரிந்து வாழ்ந்து வந்தனர். இதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட லகுமேஷ் கடந்த 10-ந் தேதி வீட்டில் பெட்ரோலை உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் லகுமேஷ் உயிரிழந்தார். இதுகுறித்து சூளகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.