விவசாயி தற்கொலை
ஓசூர் அருகே விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஓசூர்:
ஓசூர் ஒன்னல்வாடி குடிசாகனப்பள்ளியை சேர்ந்தவர் சீனிவாஸ் (வயது 40). விவசாயி. இவர் ரூ.4 லட்சம் கடனாக சிலருக்கு கொடுத்து இருந்தார். ஆனால் பணம் வாங்கியவர்கள் திரும்பி கொடுக்கவில்லை. இதனால் மனமுடைந்து காணப்பட்ட சீனிவாஸ் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஓசூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.