எருமப்பட்டி அருகே எலி பேஸ்ட் தின்று இளம்பெண் தற்கொலை
எருமப்பட்டி அருகே எலி பேஸ்ட் தின்று இளம்பெண் தற்கொலை;
எருமப்பட்டி:
எருமப்பட்டி அருகே எலி பேஸ்ட் தின்று இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
இளம்பெண்
நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே உள்ள எம்.மேட்டுப்பட்டி இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர் விநாயகமூர்த்தி (வயது 46). இவருடைய இளைய மகள் சிந்துஜா (19). இவர் நர்சிங் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு முகாம் அருகே உள்ள கோழிப்பண்ணையில் வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 10-ந் தேதி காலை சிந்துஜா அருகில் உள்ள ஊனமலை பகுதிக்கு சென்றார். இதையடுத்து தான் வைத்திருந்த எலி பேஸ்ட்டை தின்ற அவர் சிறிது நேரத்திற்கு பின்னர் வீட்டுக்கு சென்று தான் எலி பேஸ்ட்டை தின்று விட்டதாக தனது தந்தையிடம் தெரிவித்தார்.
விசாரணை
இதனால் அதிர்ச்சி அடைந்த விநாயகமூர்த்தி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மகளை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக நாமக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
ஆனால் அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று சிந்துஜா இறந்தார். இதுகுறித்து எருமப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பூபதி வழக்குப்பதிவு செய்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.