பாப்பிரெட்டிப்பட்டி அருகே விவசாயி விஷம் குடித்து தற்கொலை

பாப்பிரெட்டிப்பட்டி அருகே விவசாயி விஷம் குடித்து தற்கொலை;

Update: 2022-10-02 18:45 GMT

பாப்பிரெட்டிப்பட்டி:

பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த நாகலூரை சேர்ந்தவர் இருசப்பன் (வயது 55), விவசாயி. இவருக்கு தீராத வயிற்று வலி இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை என்று தெரிகிறது. இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் இருளப்பட்டியில் உள்ள கலைஞர் அரங்கம் முன் விஷம் குடித்து விட்டு மயங்கி கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இருசப்பன் உயிரிழந்தார். இதுகுறித்து ஏ.பள்ளிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்