முதியவர் தற்கொலை

பாப்பிரெட்டிப்பட்டி அருகே முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-09-28 18:45 GMT

பாப்பிரெட்டிப்பட்டி:

பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள அதிகாரப்பட்டியை சேர்ந்தவர் ராஜி (வயது 64). இவர் குடும்பத்துடன் திருப்பூரில் இருந்து வந்தார். இவருக்கு தீராத வயிற்று வலி இருந்து வந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்த அவர் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. நேற்று காலை வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் அருகில் உள்ளவர்கள் கதவை திறந்து பார்த்தனர். அப்போது ராஜி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது. இது குறித்த புகாரின் பேரில் ஏ.பள்ளிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்