தேன்கனிக்கோட்டையில் தூக்குப்போட்டு டிரைவர் தற்கொலை

Update: 2022-09-23 18:45 GMT

தேன்கனிக்கோட்டை:

தேன்கனிக்கோட்டை தேர்ப்பேட்டை பட்டேல் காலனியை சேர்ந்தவர் சுந்தர் (வயது 60). டிரைவர் வேலை செய்து வந்தார். இவர் கடந்த 30 ஆண்டுகளாக தனது குடும்பத்தினரை பிரிந்து தனியாக வசித்து வந்தார். மேலும் மதுபோதைக்கு அடிமையானதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் சம்பவத்தன்று அவர் தேன்கனிக்கோட்டையில் உள்ள தனியாருக்கு சொந்தமான வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் மதுபோதையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்