ஓசூரில் கடன் பிரச்சினையால் பெண் தற்கொலை

Update: 2022-09-21 18:45 GMT

ஓசூர்:

ஓசூர் அருகே உள்ள பெத்தஎலசகிரி பகுதியை சேர்ந்தவர் சிவப்பிரகாசம். இவருடைய மனைவி சுசீலா (வயது 50). இவர் அந்த பகுதியில் ஓட்டல் நடத்தி வந்தார். ஓட்டலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக அவருக்கு கடன் பிரச்சினை ஏற்பட்டது. இதனால் மனவேதனை அடைந்த சுசீலா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஓசூர் அட்கோ போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்