சூளகிரி:
சூளகிரி தாலுகா பி.கொத்தப்பள்ளியை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 38). தொழிலாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதை மனைவி கண்டித்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த வெங்கடேஷ் கடந்த 16-ந் தேதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சூளகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.