இளையான்குடி,
தாயமங்கலம் இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வருபவர் முத்தையா(வயது 67). இவர் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். சம்பவத்தன்று வலி அதிகமாக இருந்ததால் மனமுடைந்த முத்தையா எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து இளையான்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.