விஷம் குடித்து விவசாயி தற்கொலை

மொரப்பூர் அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-09-06 17:16 GMT

மொரப்பூர்:

மொரப்பூர் அருகே உள்ள காந்திநகர் புதுக்காடு கிராமத்தை சேர்ந்தவர் சீரங்கன் (வயது 65). விவசாயி. இவருக்கு அடிக்கடி வயிற்று வலி இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் மனமுடைந்த அவர் விஷம் குடித்து விட்டு மயங்கி கிடந்தார். குடும்பத்தினர் அவரை மீட்டு மொரப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிச்சைக்காக அரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் அங்கு பரிசோதித்த போது சீரங்கன் இறந்துவிட்டது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் மொரப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்