திருச்செங்கோட்டில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

திருச்செங்கோட்டில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-09-01 18:11 GMT

எலச்சிபாளையம்:

திருச்செங்கோட்டில் நாமக்கல் ரோடு நாடார் தெருவை சேர்ந்தவர் ஜெயப்பிரியா (வயது 28). இவருக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் ஜெயப்ப்ரியா கடந்த 2 ஆண்டுகளாக தாய் வீட்டில் வசித்து வந்தார். இதனிடையே கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஈரோட்டில் நடந்த உறவினர் திருமணத்துக்கு ஜெயப்பிரியா சென்றார். அப்போது உறவினர்கள் யாரும் அவரிடம் பேசவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவர் மனவேதனை அடைந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாதபோது ஜெயப்பிரியா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து திருச்செங்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

மேலும் செய்திகள்