மூதாட்டி தூக்குப்போட்டு தற்கொலை
மூதாட்டி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
எருமப்பட்டி:
எருமப்பட்டி திருப்பூர் குமரன் தெருவை சேர்ந்தவர் லட்சுமி (வயது 70). கணவரை இழந்த இந்த மூதாட்டி தனது 2-வது மகளான ஜெயா வீட்டில் தங்கி இருந்தார். நேற்று முன்தினம் மூதாட்டி, தனது தங்கையை பார்க்க செல்வதாக கூறி விட்டு சென்றார். இந்தநிலையில் எருமப்பட்டி அருகே பவித்திரம் ஏரிக்கரையோரம் ஒரு மரத்தில் லட்சுமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த எருமப்பட்டி போலீசார் மூதாட்டி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து, மூதாட்டி தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.