சேலம் தாதகாப்பட்டியில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

சேலம் தாதகாப்பட்டியில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-08-27 22:06 GMT

அன்னதானப்பட்டி:

சேலம் தாதகாப்பட்டி, குமரன் நகர் முதல் தெரு பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (வயது 30). திருவிழாக்களில் ரங்கராட்டின தொழிலாளியான இவர், கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு மனைவியை பிரிந்து விட்டார். இவர்களுக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. மனைவியை பிரிந்து வசித்து வந்ததால் தொடர்ந்து மன உளைச்சல் அடைந்த அவர் விரக்தியுடன் இருந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 25-ந் தேதி கண்ணன், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில் வெளியூர் சென்றிருந்த அவரது பெற்றோர் நேற்று வீட்டுக்கு வந்து பார்த்தனர். அப்போது அழுகிய நிலையில் இருந்த தங்களது மகனின் உடலை பார்த்து அதிர்ச்சியில் கதறி அழுதனர். இது குறித்து அவர்கள் அன்னதானப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து வந்து கண்ணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்