விஷம் குடித்து என்ஜினீயர் தற்கொலை
தர்மபுரி அருகே விஷம் குடித்து என்ஜினீயர் தற்கொலை செய்து கொண்டார்.
தர்மபுரி மாவட்டம் இண்டமங்கலம் ஊராட்சி குரும்பர் கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி. இவருடைய மகன் விக்னேஷ் (வயது 26). என்ஜினீயரிங். இவர் பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் ஊருக்கு வந்த விக்னேஷ் விஷம் குடித்து விட்டு நேற்று வீட்டில் மயங்கி கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு தர்மபுரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரிந்தது. இது குறித்து கிருஷ்ணாபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று என்ஜினீயரின் உடலை பிரேத பரிசோதனை செய்து குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விக்னேஷ் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.