வெல்டிங் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
திண்டுக்கல்லில் குடும்ப பிரச்சினையில் வெல்டிங் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
திண்டுக்கல் மேட்டுப்பட்டியை அடுத்த மொட்டணம்பட்டியை சேர்ந்தவர் விஜய் (வயது 28). வெல்டிங் தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 5 வயதில் குழந்தை உள்ளது.
குடும்ப பிரச்சினை காரணமாக கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த விஜய், இன்று வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து திண்டுக்கல் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.