நெடுஞ்சாலை பணியாளர் தூக்குப்போட்டு தற்கொலை

ஊத்தங்கரை அருகே நெடுஞ்சாலை பணியாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-08-13 17:33 GMT

ஊத்தங்கரை

சாமல்பட்டி அருகே உள்ள கே.எட்டிப்பட்டியை சேர்ந்தவர் குமரவேல் (வயது 45). நெடுஞ்சாலை பணியாளர். இவருக்கும், இவரது மனைவிக்கும் இடையே குடும்ப தகராறு இருந்தது. இதனால் அவரது மனைவி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கோபித்து கொண்டு தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் மனமுடைந்த குமரவேல் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சாமல்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்