வியாபாரி விஷம் குடித்து தற்கொலை

சூளகிரி அருகே வியாபாரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-07-28 17:41 GMT

சூளகிரி

பை வியாபாரி

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள சீகலப்பள்ளியை சேர்ந்தவர் ராஜப்பா (வயது 51). இவர் பை வியாபாரம் செய்து வந்தார். இவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சையில் அவர் குணமடையவில்லை என்று தெரிகிறது. இதனால் மனமுடைந்த ராஜப்பா விஷத்தை குடித்து மயங்கி கிடந்தார்.

விசாரணை

அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜப்பா இறந்தார். இதுகுறித்து சூளகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்