விஷம் குடித்து முதியவர் தற்கொலை

பாப்பிரெட்டிப்பட்டி அருகே விஷம் குடித்து முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-07-27 17:02 GMT

பாப்பிரெட்டிப்பட்டி:

பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள தேவராஜபாளையத்தை சேர்ந்தவர் துரைராஜ் (வயது 80). இவர் சற்று மனநலம் பாதிக்கபட்டு இருந்ததால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சம்பவத்தன்று இவர் விஷம் குடித்துவிட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். குடும்பத்தினர் அவரை மீட்டு பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் முதியவர் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்