தூக்குப்போட்டு ஆசிரியர் தற்கொலை

தூக்குப்போட்டு ஆசிரியர் தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2022-07-06 18:59 GMT

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் அருகே நாச்சியாபுரம் - காரைக்குடி சாலையில்‌ இளங்குடி பகுதியில் உள்ள பாண்டி முனீஸ்வரர் கோவில் அருகில் நேற்று மரத்தில் ஒருவர் தூக்கிட்டு தொங்குவதாக நாச்சியாபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை யடுத்து போலீசார் அங்கு சென்று உடலை கைப்பற்றி விசாரித்தனர். விசாரணையில், அவர் காரைக்குடியை சேர்ந்த முரளிராஜன் (வயது50) என்பதும், இவர் காரைக்குடியில் ஒரு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்ததும் தெரிய வந்தது. இதுகுறித்து நாச்சியாபுரம் போலீஸ்நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்