சலூன் கடைக்காரர் தற்கொலை

மனைவி பிரிந்து சென்ற விரக்தியில் மதுவில் விஷம் கலந்து குடித்து சலூன் கடைக்காரர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-07-04 16:27 GMT

மொரப்பூர்:

கம்பைநல்லூர் அருகே உள்ளது கே.ஈச்சம்பாடியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 31). இவரது பராசக்தி (26). ரமேஷ் கம்பைநல்லூரில் சலூன் கடை நடத்தி வந்தார். கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பராசக்தி கோபித்து கொண்டு பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் விரக்தியில் இருந்த ரமேஷ் மதுவில் விஷம் கலந்து குடித்துவிட்டு மயங்கி கிடந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த ரமேஷ் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கம்பைநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்