கூலித்தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
கூலித்தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
மத்திகிரி:
வேலூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா வேப்பம்குப்பம் அருகே உள்ள குப்பம்பட்டுவை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 30). இவர் ஓசூரில் பெத்தபேளகொண்டப்பள்ளியில் தங்கி கூலித்தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் சமீபகாலமாக சதீஷ்குமார் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை என்று தெரிகிறது. இதனால் மனமுடைந்த அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மத்திகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.