மோகனூர் அருகே பெண் வக்கீல் தூக்குப்போட்டு தற்கொலை

மோகனூர் அருகே பெண் வக்கீல் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-06-23 18:25 GMT

மோகனூர்:

மோகனூர் அருகே பெண் வக்கீல் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வக்கீல்கள்

மோகனூர் அருகே உள்ள வளையப்பட்டியை சேர்ந்தவர் கண்ணன். வக்கீல். இவருடைய மனைவி நித்யா (வயது 35). இவரும் வக்கீலாக இருந்தார். இவர்களுக்கு டேனிஷ் (7) என்ற மகனும், தயானி (4) என்ற மகளும் உள்ளனர். இவர்கள் 2 பேரும் மோகனூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. நேற்றும் அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

விசாரணை

இதனால் மனமுடைந்த நித்யா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து சென்ற மோகனூர் போலீசார் நித்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து நித்யா தாயார் ராஜேஸ்வரி (66) மோகனூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் தங்கவேல், சப்-இன்ஸ்பெக்டர் ஜவஹர் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்