விஷம் குடித்து கொத்தனார் தற்கொலை

விஷம் குடித்து கொத்தனார் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-06-16 18:31 GMT

ராஜபாளையம். 

ராஜபாளையம் தாட்கோ காலனியை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 35). கொத்தனார். இவருக்கு கருப்பாயி என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். மாரிமுத்துவுக்கு மது பழக்கம் இருந்ததாகவும், இதனால் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. சம்பவத்தன்றும் மாரிமுத்து மது குடித்து விட்டு வந்த போது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கருப்பாயி, மாரிமுத்துவை திட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்