கட்டிட தொழிலாளி தற்கொலை

கட்டிட தொழிலாளி தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2022-06-12 19:12 GMT

ராமநாதபுரம், ஜூன்.

ராமநாதபுரம் அருகே உள்ள சூரங்கோட்டை கே.கே.நகரை சேர்ந்த மருது என்பவரின் மகன் ராமு (வயது42). கொத்தனார் வேலை பார்த்து வந்தார். இவரின் மனைவி சசிகலா (29). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் ராமு அடிக்கடி குடித்து வந்தாராம். இதனால் கணவருடன் கோபித்துகொண்டு சசிகலா இளமனூரில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு வந்துவிட்டாராம். இதனை தொடர்ந்து குடிபோதையில் அங்கு வந்த ராமு மனைவியை குடும்பம் நடத்த வருமாறு அழைத்துள்ளார். அவர் வர மறுத்துள்ளார். இதனால் மனம் உடைந்து வீட்டிற்கு சென்ற ராமு தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து சசிகலா அளித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் பஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்