தர்மபுரி அருகே விவசாயி தற்கொலை
தர்மபுரி அருகே விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
தர்மபுரி:
தர்மபுரி அருகே உள்ள ஸ்சீராம்பட்டியை சேர்ந்தவர் காளியப்பன் (வயது 54). விவசாயியான இவருக்கு காளியம்மாள் என்ற மனைவியும், 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு லாரியில் இருந்து காளியப்பன் தவறி விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதற்காக அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சம்பவத்தன்று அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். அவரை குடும்பத்தினர் மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கிருஷ்ணாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.