பெருந்துறை
பெருந்துறை கருக்கம்பாளையம் காலனியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம். இவருடைய மகன் செந்தில்குமார் (வயது 25). கட்டிட தொழிலாளி. இந்தநிலையில் மதுப்பழக்கத்துக்கு ஆளான செந்தில்குமார் வேலைக்கு செல்லாமல் இருந்ததாக தெரிகிறது. இதை பாலசுப்பிரமணியம் கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த செந்தில்குமார் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விட்டத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் கிடைத்ததும் பெருந்துறை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று செந்தில்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிேசாதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார்கள். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.