கெலமங்கலம், ஓசூரில் தொழிலாளி உள்பட 2 பேர் தற்கொலை
கெலமங்கலம், ஓசூரில் தொழிலாளி உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.;
ராயக்கோட்டை
கெலமங்கலம், ஓசூரில் தொழிலாளி உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
தொழிலாளி
ஓசூர் வெங்கடேஷ்புரம் அருகே உள்ள சூடுகானப்பள்ளியை சேர்ந்தவர் கிருஷ்ணப்பா (வயது 45). கூலித்தொழிலாளி. இவர் கெலமங்கலம் அருகே தம்மண்டரப்பள்ளி பகுதியில் விஷம் குடித்து விட்டு மயங்கி கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கிருஷ்ணப்பா பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து கெலமங்கலம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணப்பா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தனியார் நிறுவன ஊழியர்
சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகா பச்சிகானப்பட்டியை சேர்ந்தவர் பரத்குமார் (29). இவர் ஓசூர் முனீஸ்வர் நகரில் தங்கி தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடந்தது. ஒரு குழந்தை உள்ளது. பரத்குமாருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது.
இதனால் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினையில் கடந்த 15-ந் தேதி பரத்குமார் தூக்கில் தொங்கினார். இதை கண்டு அதிர்ச்சி அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஓசூர் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி 22-ந் தேதி பரிதாபமாக இறந்தார். இது குறித்து ஓசூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.