பாப்பிரெட்டிப்பட்டி அருகேவிஷம் குடித்து பெண் தற்கொலை

பாப்பிரெட்டிப்பட்டி அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-10-05 19:30 GMT

பாப்பிரெட்டிப்பட்டி:

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள அஜ்ஜம்பட்டியை சேர்ந்தவர் கோவிந்தன். தொழிலாளி. இவரது மனைவி மங்கம்மாள் (வயது29). இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். கோவிந்தனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால் அவர் தினமும் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கோவிந்தன் மது குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்துள்ளார். இதனால் மனமுடைந்த மங்கம்மாள் நேற்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பொம்மிடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று மங்கம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்