ஊத்தங்கரை அருகேகிணற்றில் குதித்து பெண் தற்கொலை

ஊத்தங்கரை அருகே கிணற்றில் குதித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.;

Update: 2023-10-04 19:45 GMT

ஊத்தங்கரை

ஊத்தங்கரை அருகே உள்ள வெப்பாலம்பட்டியை சேர்ந்தவர் சத்யராஜ். இவரது மனைவி பிரியா (வயது 28). இவர்களுக்கு குழந்தை இல்லை. இதனால் பிரியா மன வருத்தத்தில் இருந்தார். இதனால் மனமுடைந்த பிரியா, நேற்று முன்தினம் வெப்பாலம்பட்டியில் உள்ள விவசாய கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்ததும் ஊத்தங்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து ஊத்தங்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்