ராயக்கோட்டையில்ஓவிய ஆசிரியர் தூக்குப்போட்டு தற்கொலைபோலீசார் விசாரணை

ராயக்கோட்டையில் ஓவிய ஆசிரியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-09-30 19:30 GMT

ராயக்கோட்டை:

ராயக்கோட்டையில் ஓவிய ஆசிரியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஓவிய ஆசிரியர்

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டையில் உள்ள ரகமத் காலனியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 41). இவருக்கு பிரியா என்ற மனைவியும், சர்வேஷ் என்ற மகனும், பத்மா என்ற மகளும் உள்ளனர். மணிகண்டன் சூளகுண்டா அரசு நடுநிலைப்பள்ளியில் பகுதி நேர ஓவிய ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. இவர் சிலரிடம் கடன் பெற்று அதனை திருப்பி செலுத்த முடியாமல் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

தற்கொலை

இதனால் விரக்தி அடைந்த அவர் கடந்த 28-ந் தேதி வீட்டில் தூக்குப்போட்டு கொண்டார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் மணிகண்டனை மீட்டு சிகிச்சைக்காக ராயக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்ைச அளிக்கப்பட்டு வந்தது. எனினும் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த தற்கொலை சம்பவம் குறித்து ராயக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்