ராயக்கோட்டை
கெலமங்கலம் அருகே உள்ள ஜக்கேரி அருகே உள்ள விருப்பாச்சி நகரை சேர்ந்தவர் பகவதி (வயது22). கூலித்தொழிலாளி. சம்பவத்தன்று இவர் ஏ.கொத்தப்பள்ளியில் உள்ள செங்கல் சூளையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது தந்தை மஞ்சுநாத் கெலமங்கலம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து பகவதி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.