ஓசூர் அருகேவாலிபர் விஷம் குடித்து தற்கொலை

Update: 2023-08-19 19:45 GMT

ஓசூர்

ஓசூர் அருகே வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

விஷம் குடித்த வாலிபர்

கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளியை சேர்ந்தவர் ஆஞ்சப்பா. இவருடைய மகன் பவன் (வயது23). இவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு, பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இருப்பினும் குணமாகவில்லை. சம்பவத்தன்று பவன், ஓசூர் அருகே சித்தனப்பள்ளியில் உள்ள உறவினர் வீட்டு வந்தார். அங்கு பண்ணை வீட்டில் அவர் விஷம் குடித்து விட்டு மயங்கி கிடந்தார்.

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் பவனை மீட்டு ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

பரிதாப சாவு

இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். இது குறித்து பாகலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று பவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

வாலிபர் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உறவினர் வீட்டுக்கு வந்த வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்