மத்திகிரி:
சேலம் எஸ்.பாப்பாரப்பட்டியை சேர்ந்தவர் ரஞ்சித் (வயது 22). இவர் ஓசூர் எஸ்.முதுகானப்பள்ளி பகுதியில் தங்கி தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்தார். இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் காதல் தோல்வி காரணமாக மனமுடைந்த ரஞ்சித் வீட்டில் கடந்த 10-ந் தேதி இரவு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மத்திகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.