இரும்பாலை
இரும்பாலை அருகே திருமணமாகாத விரக்தியில் வியாபாரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
வியாபாரி
சேலம் சிவதாபுரம் அருகே உள்ள பெருமாம்பட்டியை சேர்ந்தவர் சோமு என்கின்ற ஏழுமலை (வயது 52). இவர் சோப்பு மற்றும் டீத்தூள் வியாபாரி. இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் கடந்த 4-ந்தேதி வேலை முடித்துக்கொண்டு வீட்டிற்கு வந்தார். மறுநாள் நீண்ட நேரமாகியும் அவர் வீட்டை விட்டு வெளியே வரவில்லை.
இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, அவர் படுக்கையில் விஷம் குடித்து விட்டு விட்டு பிணமாக கிடந்தார். இதுகுறித்து இரும்பாலை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாரதா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர்.
போலீசார் விசாரணை
அப்போது திருமணம் ஆகாத விரக்தியில் ஏழுமலை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் ஏழுமலையின் உடலை கைப்பற்றி சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். வியாபாரி தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.