பர்கூர்:
பர்கூர் தாலுகா வேடர்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது 23). கூலித்தொழிலாளி. உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட இவர் பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. இதனால் மனமுடைந்த அவர் அந்த பகுதியில் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பர்கூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குட்டியப்பன் விசாரணை நடத்தி வருகிறார்கள்.