பர்கூர்
பர்கூர் அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கிருஷ்ணகிரி உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.
பெண் தற்கொலை
போச்சம்பள்ளி அருகே உள்ள மோட்டுப்பட்டியை சேர்ந்தவர் சரவணன். கூலி தொழிலாளி. இவரது மனைவி சத்யா (வயது 26). இவர்களுக்கு திருமணம் ஆகி 3 ஆண்டுகள் ஆகிறது. இந்த தம்பதிக்கு 10 மாதமான ஒரு பெண் குழந்தை உள்ளது. சத்யா குண்டியால்நத்தம் கிராமத்தில் உள்ள பெற்றோர் வீட்டில் இருந்து வந்தார்.
இதனிடையே சத்யாவுக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதற்காக அவர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. இதனால் அவர் மனமுடைந்து காணப்பட்டார். கடந்த 23-ந் தேதி மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டதால் அவதிக்குள்ளான சத்யா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
உதவி கலெக்டர் விசாரணை
இது குறித்து பர்கூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று சத்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மேலும் திருமணமான 3 ஆண்டுகளில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டது குறித்து பர்கூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மனோகரன், கிருஷ்ணகிரி உதவி கலெக்டர் பாபு ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.