ஓசூரில்வடமாநில வியாபாரி தற்கொலை

Update: 2023-07-22 19:45 GMT

ஓசூர்

ஒடிசா மாநிலம் கந்தார்பரா பகுதியை சேர்ந்தவர் சரோஜினி சகானி (வயது26). இவர், ஓசூர் பேகேபள்ளியில் தங்கி துணி வியாபாரம் செய்து வந்தார். கடந்த 20-ந் தேதி மாலை, இவர் அக்கம், பக்கத்தினரிடம் மது குடிக்க பணம் கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் பணம் கொடுக்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சரோஜினி சகானி, வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்