சூளகிரி:
சூளகிரி தாலுகா செம்பரசனப்பள்ளி அருகே உள்ள காருபாலாவை சேர்ந்தவர் ஆஞ்சி (வயது 37). விவசாயி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. மேலும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்.
இதற்காக அவர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த ஆஞ்சி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சூளகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.