தியாகதுருகத்தில்கரும்பு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் ஆலோசனை

தியாகதுருகத்தில் கரும்பு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

Update: 2023-08-14 18:45 GMT

தியாகதுருகம், 

தியாகதுருகத்தில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்கு தனியார் சர்க்கரை ஆலை சங்கத்தலைவர் சாந்தமூர்த்தி தலைமை தாங்கினார். தனியார் சர்க்கரை ஆலைகள் சங்க மாநில தலைவர் வேல்மாறன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஏழுமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ஸ்டாலின்மணி, வட்ட செயலாளர் தெய்வீகன், ஆலை சங்க செயலாளர் ரகுராமன் ஆகியோர் கோரிக்கை விளக்க உரையாற்றினர்.கூட்டத்தில் தியாகதுருகம் அருகே உள்ள தனியார் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டிய பாக்கி ரூ.26 கோடியை, 15 சதவீத வட்டியுடன் பெற்று தரவேண்டும். 4 ஆண்டுகளாக மூடிக்கிடக்கும் தனியார் சர்க்கரை ஆலையை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும். தனியார் சர்க்கரை ஆலைக்கு விவசாயிகள் வெட்டி அனுப்பிய கரும்புக்கு உயர் நீதிமன்ற உத்தரவுபடி மாநில அரசின் பரிந்துரை விலையை வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதுதவிர மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வருகிற 31-ந் தேதி கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

இதில் தனியார் சர்க்கரை ஆலை சங்க நிர்வாகி ரகுராமன், செயலாளர் அருள்தாஸ், துணை தலைவர்கள் சிங்காரவேல், வீரப்பன், துணைச் செயலாளர் முத்து டெண்டுல்கர் உள்பட விவசாயிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்