கரும்பு விவசாயிகள் 8-வது நாளாக போராட்டம்

கரும்பு விவசாயிகள் 8-வது நாளாக போராட்டம்

Update: 2022-12-07 20:47 GMT

கபிஸ்தலம் அருகே திருமண்டங்குடி தனியார் சர்க்கரை ஆலை முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி கரும்பு விவசாயிகள் நேற்று 8-வது நாளாக எருமை மாட்டிடம் மனு அளித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எருமை மாட்டிடம் மனு

தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் அருகே திருமண்டங்குடியில் திரு ஆருரான் சர்க்கரை ஆலை உள்ளது. இந்த ஆலையில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக முதல்-அமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கடந்த 30-ந் தேதி முதல் சர்க்கரை ஆலை முன்பு கரும்பு விவசாயிகள் பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்றுமுன்தினம் கரும்பு விவசாயிகள் கையில் மண்சட்டி ஏந்தி அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தநிலையில் நேற்று 8-வது நாளாக கோரிக்கைகளை வலியுறுத்தி எருமை மாட்டிடம் மனு அளித்து போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு கரும்பு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் தங்க காசிநாதன், நாக முருகேசன் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் கரும்பு விவசாய சங்க நிர்வாகிகள் நல்லதம்பி, அமிர்தலிங்கம், எஸ்.கே. செந்தில், மோகன்தாஸ், குணசேகர், ரவிச்சந்திரன் மற்றும் நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு எருமை மாட்டிடம் மனு அளித்தனர்.

கோஷங்கள்

பின்னர் வங்கிகளில் வாங்கிய கடன் முழுவதையும் தீர்த்து விவசாயிகளை விடுவிக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் அறிவித்த கரும்புக்கான முழுதொகை முழுவதையும் வட்டியோடு ஒரே தவணையில் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். ஆலையை தனியாருக்கு தாரைவார்க்காமல் தமிழக அரசு ஏற்று நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் கோஷமிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்